Monday, April 21, 2008

தமிழ் சொற்கள் பயன்படுத்துவோம்!

தமிழ் சொற்கள் பயன்படுத்துவோம்!

வார்த்தை - சொல்
தினமும் – அன்றாடம், நாள்தோறும்
ஜாஸ்தி – அதிகம்
கம்மி – குறைவு
கஷ்டம் – சிரமம்
சந்தோஷம் – மகிழ்ச்சி
தயார் – ஆயத்தம்
சாதம் – சோறு
நிஜம் – உண்மை
சூப்பர் - அருமை, பிரமாதம், அசத்தல்
இஷ்டம் - விருப்பம்
வாபஸ் – திரும்ப
மாமுல் – வழக்கம்
அவசியம் – தேவை
மைதானம் – திடல்
சுத்தம் – தூய்மை

லஞ்சம் - கையூட்டு
பரவாயில்லை - தாழ்வில்லை
காலம் - நேரம், பருவம் (பயன்படுத்தும் சூழலைப் பொறுத்து)

அனுமதி - உத்தரவு

புத்தகம் -நூல்
சேவை -தொண்டு
நகர் - பட்டினம்
சர்ச்சை - விவாதம்

லாயக்கு - ?

ஆபத்து - ?

வாடகை - ?
சொர்க்கம் - ?
நரகம் - ?
கௌரவம் - ?
நாகரீகம் - ?
விஷயம் - ?

பிசி - ?

ஃபிரி - ?

மேற்கண்ட சொற்களில் ஏதேனும் பிழையிருப்பின் என் மின்னஞ்சலுக்கு bas.balaji@gmail.com தெரிவிக்கவும். உடனே மாற்றி விடுகிறேன். வேறு ஏதேனும் புதிய சொற்கள் தெரிந்தாலும் சொல்லுங்கள்! நன்றி!!!

தமிழ் எண்கள் - தெரிந்து கொள்வோம்!

தமிழ் எண்கள்
௧ = 1
௨ = 2
௩ = 3
௪ = 4
௫ = 5
௬ = 6
௭ = 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧ = 11
௰௨ = 12
௰௩ = 13
௰௪ = 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭ = 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱ = 100
௨௱ = 200
௩௱ = 300
௱௫௰௬ = 156
௲ = 1000
௲௧ = 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (lakh)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (10 lakhs)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (crore)
௰௱௱௲ = 100,000,000 (10 crore)
௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

Thursday, April 17, 2008

விதை

விதை முளைக்கவில்லையெனில் அதற்கு

விதை மட்டும் பொறுப்பல்ல,

சில நேரம் விதை

சில நேரம் விழுந்த இடம்

சில நேரம் சூழல்

அதற்காக விதைப்பதை விடாதே

அந்தச் சில நேர சிக்கல்களை அறிந்து

சரியானதை விதை

உன் எல்லா விதையும் முளைக்கும்!