Friday, September 14, 2012

உலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய் -- துபாய் மால் - (The DubaiMall)



அனைவருக்கும் வணக்கம்,
முந்தைய பதிவில் உலகிலேயே உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா பற்றிப் பார்த்தோம். 
வாருங்கள், இந்தப் பதிவில் உலகிலேயே மொத்த பரப்பளவில் பெரிய ஷாப்பிங் மால் ஆன துபாய் மால் பற்றிப் பார்க்கலாம்... கடைகள் அமைந்திருக்கும் கடைத்தொகுதி பகுதியை வைத்து கணக்கிட்டால் உலகிலேயே ஆறாவது பெரிய மால் ஆகும்.

துபாய் மால்:




















உலகிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் மால் என்ற பெருமையை உடைய இந்த துபாய் மால். 4 ஆம் தேதி நவம்பர் - 2008 அன்று திறக்கப்பட்டது. 12 மில்லியன் சதுர அடிகள்  பரப்பளவு கொண்ட இந்த துபாய் மாலில் தற்போது சுமார் 1200 கடைகள் இருக்கின்றன. முன்பு பார்த்த உலகத்தின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவுடன் இணைந்து கட்டப்பட்டதுதான் இந்த துபாய் மால். பெரிய பெரிய கடைகள், கடைகளின் வித விதமான உள் கட்டுமானம், கொள்ளை கொள்ளும் வண்ணங்கள், மின்னும் விளக்குகள் என சொல்லிக் கொண்டே போகலாம்... 


வாருங்கள் , எனக்குத் தெரிந்ததை, நான் பார்த்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....



துபாய் மால் தொடங்கிய புதிதில் இதைச் சுற்றிப் பார்க்கவே கூட்டம் கூட்டமாக மக்கள் சென்றனர். அமீரக வாழ் மக்கள் ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் இங்கு போய் சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம்.... வளாகம் முழுவதையும் சுற்றி வர வேண்டுமென்றால் கண்டிப்பாக இரண்டு நாட்கள் தேவைப்படும். சுற்றுலாப்பயணிகள் பலரைக் கவர்ந்த இடமான துபாய் மால், பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. அதிகளவிலான பார்வையாளர்கள், ஐஸ் ரிங், சினிமா, அக்வாரியம் இப்படி பல சிறப்புகள் இருக்கின்றன...

வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்...

பார்வையாளர்கள்:

அதிகமான பார்வையாளர்கள் வந்து போன இடம் என்ற சாதனையை நடத்திக் காட்டியிருக்கிறது இந்த துபாய் மால். 2011 ஆண்டின் புள்ளி விவரக் கணக்குப் படி உலகத்திலே 54 மில்லியன் பார்வையாளர்கள் shopping மற்றும் leisure க்காக வந்து  போன இடமாக துபாய் மால் திகழ்கிறது. இந்தக் கணக்கு உலகின் மற்ற சில புகழ்பெற்ற இடங்களைப் பார்க்க வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட கூடுதலாக இருக்கின்றது.


Aquarium & Underwater Zoo

துபாய் மாலில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு சிறப்பான இடம், இந்த Aquarium & Underwater Zoo. 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட உலகிலேயே மிகப்பெரிய மீன் தொட்டி. 51 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும், 11 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பெரிய மீன் தொட்டியில் 33000 வகையான கடல் வாழ் உயிரினங்களை நாம் கண்டு ரசிக்கலாம்... 



துபாய் மாலின் மூன்று அடுக்கில் இருப்பவர்களும் கண்டு ரசிக்கும் படி, கட்டப்பட்டுள்ள வெளிப்புற அக்ரிலிக் பேனல் கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற்றுள்ளது.



இந்த மீன் தொட்டிக்கு நடுவே பெரிய tunnel ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். 48 மீட்டர் தூரம் உள்ளே நடந்து போய் 270 டிகிரி பார்வையில், மீன்களையும் கடல் வாழ் உயிரனங்களையும் கண்டு ரசிக்கலாம். 



இதற்கும் மேலாக கண்ணாடியால் செய்யப்பட்ட படகில் மீன் தொட்டியின் மேலே பயணம் செய்து கொண்டே கண்டு ரசிக்கலாம், சிறப்பான உடை அணிந்து மீன் தொட்டிக்கு, பயிற்சியாளர் துணையுடன் இறங்கி பார்க்கலாம் என பல சிறப்புகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை.
Underwater Zoo:

மீன் தொட்டிக்கு மேலே, துபாய் மாலின் இரண்டாவது அடுக்கில் Underwater Zoo அமைத்திருக்கிறார்கள். இதில் பல அரிதான் கடல் வாழ் உயிரினங்களை கண்ணாடி தொட்டிகளில் வைத்திருக்கிறார்கள். இங்கு சென்றால் மீன் தொட்டியை மேலே இருந்து கண்டு ரசிக்க முடியும்... கண்ணாடிப்படகுகளில் செல்பவர்களையும் பார்க்க முடியும். 

Aquarium & Underwater Zoo இரண்டையும் பார்வையிட இப்பொழுது 50 திராம்ஸ்கள் கட்டணமாகப் பெறுகிறார்கள்.


துபாய் மாலில் நான் எடுத்த சில படங்கள் இங்கு காணலாம்.

இன்னும் துபாய் மாலில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கின்றன.... பெரிய நடனமாடும் நீரூற்று பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்....



அனைவருக்கும் நன்றி...


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

Aquarium & Underwater Zoo - வியக்க வைத்தது... நன்றி...

நன்னயம் said...

" உலகிலேயே பெரிய ஷாப்பிங் மால் ஆன துபாய் மால்"
இந்த தகவலில் சிறு திருத்தம். "உலகிலேயே பெரிய ஷாப்பிங் மால் ஆன துபாய் மால்" அதனுடையான மொத்த பரப்பளவிலேயே குறிப்பிடப்படுகிறது. கடைத்தொகுதி பரப்பளவு ஏறத்தாள 3.5 million சதுர அடி மட்டுமே. கடை தொகுதிகளின் பரப்பளவு அடிப்படையில் இது உலகிலேயே 12 வது பெரிய ஷாப்பிங் மால். இந்தியாவில் உள்ள Mall of India எட்டாவது இடத்தில் வருகின்றது.

Tamilthotil said...

இதற்கும் மேலாக கண்ணாடியால் செய்யப்பட்ட படகில் மீன் தொட்டியின் மேலே பயணம் செய்து கொண்டே கண்டு ரசிக்கலாம், சிறப்பான உடை அணிந்து மீன் தொட்டிக்கு, பயிற்சியாளர் துணையுடன் இறங்கி பார்க்கலாம் என பல சிறப்புகள் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை.


விலை இதையெல்லாம் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.

. இந்தியாவில் உள்ள Mall of India எட்டாவது இடத்தில் வருகின்றது.

இந்த தகவலும் புதிதாக இருக்கிறது

Balaji said...

நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே...

Balaji said...

நன்றி Ethicalist E ...

தகவலைத் திருத்தியிருக்கிறேன்...

பரப்பளவில் உலகிலேயே பெரிய மால்.

கடைத்தொகுதி பரப்பளவில் இது ஆறாவது பெரிய மால் ஆம்.

Balaji said...

நன்றி தமிழ்ராஜா...