Wednesday, September 19, 2012

உலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய் -- துபாய் ஃபவுண்டெய்ன் (The Dubai Fountain)


அனைவருக்கும் வணக்கம்,

முந்தைய பதிவில் , துபாய் மால் மற்றும் அக்வாரியம் பற்றிப் பார்த்தோம்... 

வாருங்கள் துபாய் ஃபவுண்டெய்ன் எனப்படும் செயற்கை நீருற்றைப் பற்றிப் பார்க்கலாம்...

துபாய் ஃபவுண்டெய்ன் (The Dubai Fountain)

30 ஏக்கர் பரப்பளவில் உள்ள புர்ஜ் கலிஃபா லேக் என்னுமிடத்தில், (துபாய் மாலை ஒட்டியுள்ள  இடம்) துபாய் ஃபவுண்டெய்ன் (The Dubai Fountain) அமைக்கப்பட்டிருக்கிறது. லாஸ் வேகாஸ் நகரிலுள்ள Fountains of Bellagio  என்ற செயற்கை நீருற்றை கட்டிய, கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு கம்பெனி, இந்த துபாய் ஃபவுண்டெய்னை வடிவமைத்திருக்கிறார்கள்.



[எனது நண்பர் திரு. நௌஃபல் எடுத்த படம்]

துபாய் நீரூற்று 150 மீட்டர் உயரத்துக்கு(அதாவது 500 அடி) தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் திறனுள்ளது. அதாவது 50 மாடி கட்டிட உயரத்திற்கு இந்த நீரூற்று தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 275 மீட்டர் தூரத்திற்கு, வெவ்வேறு அளவில் ஐந்து வட்டங்களாகவும், இரண்டு வளைவுகளாகவும் இந்த நீருற்று வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் 124 மாடியில் இருந்து, இந்த நீரூற்றுக் காட்சிகளைப் பார்ப்பது மிகவும் அழகாக இருக்கும் என்று சென்று வந்த நண்பர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.


[எனது நண்பர் திரு. நௌஃபல் எடுத்த படம்]

இந்த துபாய் ஃபவுண்டெய்ன் பற்றிய சில சிறப்புகள்;

உலகிலேயே பெரிய நடனமாடும் செயற்கை நீரூற்று. (World’s largest dancing fountain)

சுமார் 6600க்கும் மேற்பட்ட WET சூப்பர் லைட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் (the most advanced incandescent large fountain lights available today)

25 கலர் ப்ரொஜக்டர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்

நீரூற்றின் மேல் நோக்கிச் செல்லும் ஒளிக்கற்றையை 20 மைல்களுக்கு அப்பால் இருந்தும் காணலாமாம்.

விண்வெளியில் இருந்து பார்த்தால், மத்திய கிழக்கு நாடுகளின் நிலப்பரப்பில் வெளிச்சமான பகுதியாக இது தெரியுமாம்.

அரபி மற்றும் ஆங்கிலப் பாடல்களின் இசைக்கேற்ப நடனமாடும்.

1.5 million lumens of projected light

500 அடி உயரத்திற்கு தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும்.

ஒரு நேரத்தில் 83000 லிட்டர் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும்.


இந்த வீடியோக்களைக் காணுங்கள், கண்டிப்பாக நீங்களும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.




உலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய் தொடர்பான முந்தைய பதிவுகளை இங்கே காணலாம்.

அடுத்த பதிவில் துபாய் மெட்ரோ பற்றிப் பார்க்கலாம்... 

அனைவருக்கும் நன்றி.

9 comments:

aathmaa said...

அற்புதம்..கண் குளிர கண்டேன்..விட்னி ஹூஸ்டனின் பாடலுக்கு ஏற்ப நீருற்று குழைந்து ஆடியது அட்டகாசம்..அதைவிட அரபிபாடலுக்கு..நம்பமுடியவில்லை.இரண்டு தடவை பார்த்தேன்..

நல்ல பதிவு பாஸ்..தொடருங்க ஒங்க இந்திரபுரி (துபை) வர்ணணைகளை..

aathmaa said...

அற்புதம்..கண் குளிர கண்டேன்..விட்னி ஹூஸ்டனின் பாடலுக்கு ஏற்ப நீருற்று குழைந்து ஆடியது அட்டகாசம்..அதைவிட அரபிபாடலுக்கு..நம்பமுடியவில்லை.இரண்டு தடவை பார்த்தேன்..

நல்ல பதிவு பாஸ்..தொடருங்க ஒங்க இந்திரபுரி (துபை) வர்ணணைகளை..

Jaffer ALi said...

இசைக்கு ஏற்ப நடனமாடும் தண்ணீர் ரொம்பவும் அழகுதான் பாஸ்..

Balaji said...

நன்றி ஐயா. :-)

Balaji said...

நன்றி ஜெஹபர்...

semmalai akash said...

துபையில் இருந்துகொண்டு பல முறை இந்த நடனங்களை பார்த்திருக்கிறேன், இருந்தாலும் இதன் சிறப்பு அம்சங்கள் தெரியாதுங்க இப்ப நீங்க இவ்ளோ விபரமா சொன்ன பிறகுதான் தெரிந்துகொண்டேன். தொடர்க...... உங்களுடைய இந்த சேவையை பாராட்டுகிறேன் வாழ்த்துகள்.

Balaji said...

ThAnks thambi

திண்டுக்கல் தனபாலன் said...

அழகாக இருக்குங்க... இன்னும் நிறைய படங்கள் எடுத்து சேர்க்கலாமே... நன்றி...

Balaji said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.