Sunday, October 28, 2012

ஆஜீத் காலிக் -- பட்டம் வென்றான் எங்கள் இதயம் கொண்டான்... (Aajeedh Khalique)

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 - ஆஜீத் காலிக்


நாங்க எதிர்பார்த்துதான் இருந்தோம், இருப்பினும் உள்ளூர ஒரு பதட்டம்... என்ன நடக்கும்? எல்லாரும் வாக்களித்திருப்பார்களா? எங்கள் ஆஜித் வென்று விடுவானா? என ஒரு பதட்டம் கடந்த வாரம் முழுவதும் ஒரு பாதிப்பாய் இருந்தது... கடைசியா அந்த நாளூம் வந்தது, “”வந்தே மாதரம்” நீ முழங்கியதும்  உடலெல்லாம் உற்சாகம் கரை புரண்டோடியது... சந்தோச கண்ணீரே” என நீ பாடியதும், பார்த்தவர் அனைவருக்கும் சந்தோசக் கண்ணீர் வந்தது உண்மை.... பெரும் மகிழ்ச்சி... வழக்கம்போல பலர் எழுந்து நின்று வாழ்த்தினர்... விஜய் டிவி நேரடி ஒளிபரப்பு என நிகழ்ச்சி  தொடர்ந்து சென்று கொண்டிருந்தாலும், ஃபேஸ்புக்கில் ரசிகர்கள் உன் வெற்றியை அறிவித்த போது, என்னவென்று புரியாமல் சற்று குழம்பி போயிருந்தோம்... இறுதியாக நீ வென்ற செய்தி கேட்ட போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சிக்கு வருவார் என எதிர்பார்த்திருக்கவில்லை... அனைவருக்கும் பிடித்த ஏ ஆர் ரகுமானின் கையாலேயே நீ பட்டம் பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி... இசை உலகமே வியந்து பார்க்கும் ஏ ஆர் ரகுமான் உன்னை வியந்து பாராட்டியது உன் இசைக்கும், உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி.  இசைப்புயலின் வாயால் ”Born Superstar” பட்டம் பெற்றதும் உனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மகிழ்ச்சி.கடுமையான போட்டிகளைத் தாண்டி, வென்றெடுத்தாய் பட்டத்தை... பட்டம் வெல்லத் தகுதியானவன் நீ... ஆனால் இத்தனை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து எங்கள் அனைவரையும் உன் இசையால் கட்டிப் போட நீ பட்ட பாடு உனக்கும் இறைவனுக்கும் மட்டும்தான் தெரியும். உன் கடின உழைப்பும் இறை அருளும் இன்றி இது ஏதும் நடந்தேறியிருக்காது....
ஆஜீத் காலீக்...
எங்கள் இதயம் கவர்ந்தவனே...

இனிதான் உனக்கு மேலும் கவனம் தேவை...
இன்னும் எத்தனையோ தூரம் நீ போக வேண்டியிருக்கிறது... 
இசை மட்டுமின்றி பல களம் நீ காண வேண்டும்... 
பல மேடைகள் உன்னை வரவேற்க காத்திருக்கும்... 
இதே உழைப்பும், கவனமும் இருந்தால்தான் அனைத்தும் உன் வசப்படும்.
புகழ் உன்னைச் சுற்றி வரும் இந்த வேளையில் 
இப்பொழுது போல் எப்பொழுதும் பணிவாய் தொடர்வாய்... 

சூப்பர் சிங்கர் மேடையில் வெற்றி கண்ட ப்ரகதி, யாழினி, சுகன்யா, கௌதம் மற்றும் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்....இப்படி அருமையான கலைஞர்களை வெளிக்கொண்டு வரும் விஜய் டிவிக்கு நன்றி.


இனிய இசையே - எங்கள்...
இதயம் கவர்ந்தவனே...
பட்டத்திற்கு தகுதியானவனே...
பிறவிக் கலைஞனே...
இன்னும் நீ வெற்றி பெற
வாழ்த்துகள் ஆஜீத்...
இறைவனுக்கு நன்றி...

இப்படிக்கு,
உன் ரசிகன்.


(நன்றி: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து)

10 comments:

niyaz ahamed said...

விஜய் டிவியில் அன்று நேரடி ஒளிபரப்பு அரை மணிநேரம் தாமதாகத்தான் மக்கள் அனைவருக்கும் சென்றடைந்தது.. அங்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நேரடியாக காண அமர்ந்திருந்த எனது நண்பர்கள் முகநூலில் 20 நிமிடங்களுக்கு முன்னரே வெற்றியாளரை அறிவித்துவிட்டனர்.. அந்த மகிழ்ச்சியை முதலில் பாலாஜியிடம் தான் பகிர்ந்து கொண்டேன்.. அவரால் நம்ப இயலவில்லை.. ''யோவ் நான் முழிச்சி உக்காந்து லைவா பாத்துக்கிட்டு இருக்கேன் நீ யாருயா அத சொல்லன்னு'' கோபமடைந்தார்... (நேத்து நம்ம விஜயகாந்த் மாதிரி).. பிறகு விஷயத்த சொன்ன பிறகும் இந்த மனுஷன் நம்பல.. பிறகு அத லைவா பாத்துட்டு தான் என்னை சிலாகிச்சார்.. எப்படியோ எங்க ஆஜித் ஜெயிச்சது அவன விட நாங்க ரெண்டு பேரும்தான் பேரானந்தம் அடைஞ்சோம் அது தான் உண்மை..

Balaji said...

ஹா ஹா ஹா... உண்மைதான் நியாஸ்.... கொஞ்சம் பதட்டமாத்தான் இருந்துச்சு....

ஆஜித் வென்றது மட்டற்ற மகிழ்ச்சி...

சேட்டைக்காரன் said...

இதையெல்லாம் என்னாலே பார்க்க முடியலேன்னாலும், ஊர்முழுக்க இதே பேச்சா இருந்திச்சு பாலாஜி! பையனுக்கும், உங்களுக்கும் (அருமையான இடுகைக்காக) பாராட்டுகள்! :-)

Balaji said...

Nanri Aiya :-)

சிட்டுக்குருவி said...

உங்கள் தளம் மூலமாகவும் ஆஜித்துக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஜீத் அவர்களுக்கு வாழ்த்துகள்...

பகிர்வுக்கு நன்றி...

Balaji said...

மிக்க நன்றி :-)

Balaji said...

மிக்க நன்றி :-)

Suganthini said...

தல தளபதி....க்கு நாங்கள் போட்ட வோட்டு வீண் போகவில்லை.... நீங்கள் ஆஜீத் பற்றி முதல் எழுதிய கட்டுரைக்கும் ஒரு மிக பெரிய சந்தோசம் கிடைத்து உள்ளது.... நன்றி பாலாஜி....

Balaji said...

Suganthini

உண்மைங்க...

மிக்க நன்றி...

மகிழ்ச்சி...