அனைவருக்கும் வணக்கம்,
துபாயின் பல இடங்களில் இது போன்ற வண்ண விளக்குகள் Eid in Dubai என அறிவித்துக் கொண்டிருக்கின்றன.
துபாய் அரசாங்கத்தால், 2008 ஆண்டு முதல் தொடங்கப்பட்ட விழா Eid in Dubai ஆகும். Eid Al Fitr மற்றும் Eid Al Adha விழாக்களைக் கொண்டாடும் விதமாக Eid in Dubai தொடங்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கிறார்கள், மேலும் ஆண்டு முழுவதும் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆகவே, குழந்தைகளும் , துபாய் வாழ் மக்களும், நாடுகள் வேறுபாடின்றி அனைவரும், அனைத்து வயதினரும் மகிழ்ச்சியுடன் இந்த விழாக்களைக் கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
Eid in Dubai விழாவின் ஒரு பகுதியாக துபாய் க்ரீக் பகுதியில் இரவு சரியாக 9 மணிக்கு கண்கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன்.
என் நண்பர் நௌஃபல் எடுத்த படம்.
நம்ம ஊருல திருவிழாக் காலத்தில் என்னென்ன காண்போமோ, என்னென்ன வாங்கி உண்போமோ, அத்தனையும் இங்கும் கிடைக்கும்.... குழந்தைகளுடன் மாலை வேளையில் இந்த துபாய் க்ரீக் பகுதிக்கு சென்றால் நேரம் போவதே தெரியாது...
பஞ்சு மிட்டாய் சாப்பிடுறீங்களா...
மக்காச்சோளம்...
பலூன் வாங்கலாம்....
குழந்தைகள் விளையாட ரப்பர் பலூன் திடல்
இது மட்டுமில்லாமல் பல நாடுகளைச் சேர்ந்த கலைக்குழுவினரின் கலாச்சார ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
கென்யாவைச் சேர்ந்தவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்:
துபாயின் வெப்பநிலை மாறி குளிர தொடங்கி விட்டது, பக்ரீத் பண்டிகையை ஒட்டி நீண்ட விடுமுறை வரப் போகிற மகிழ்ச்சியில் அனைவரும் காத்திருக்கின்றனர். இன்னும் அடுத்தடுத்து துபாயில் பல நிகழ்ச்சிகள் வர இருக்கின்றன. Dubai Global Village இன்று தொடங்கிவிட்டது.... முதல் நாள் அனுமதி இலவசம்.
Dubai Shopping Festival, Global Village ஆகியவற்றைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
படங்கள் அனைத்தும் நான் எடுத்தவை... மேலும் படங்களைக் காண இங்கே செல்லவும்...
அனைவருக்கும் நன்றி.
4 comments:
படங்கள் சூப்பர்ப்...
நன்றி...
நன்றி நண்பரே...
படங்கள் அதற்கான விளக்கம் எல்லாம் அருமையாக இருக்கிறது
நன்றி சிட்டுக்குருவி... :-)
Post a Comment