Sunday, November 17, 2019

வீராப்பு - ”பரிவை” சே. குமார்


பொழுது பளபளனு விடிவதோடு கதை தொடங்குதுஒரு தகவல தெரிஞ்ச பிறகு உங்களுக்குத் தெரியும்னு நினைச்சு சொல்லாம இருந்துட்டேன் என்று இப்போதைய மனிதர்களைப் போல கிராமத்தானால் இருந்து விட முடியாதுதான் கேள்விப் பட்டத உடனடியாக உரியவனிடம் முதலில் கொண்டு போய்ச் சேக்காம நிம்மதியா இருக்க முடியாதுஅப்படி தான் கேள்விப்பட்ட சேதியோடு சாமிநாதன் வீட்டு வாசலில் நிற்கிறார் சேதுக்கரசுசொல்லும் சேதி என்னன்னா செல்வம் என்பவரின் மகன் குடும்பத்தோடு வந்திருக்கான்யார் இந்த செல்வம் அவர் மகன், அவன் வந்ததுக்கு இவர் ஏன் பதறுகிறார் என அறியும் ஆர்வத்துடன் கதையைப் படிக்கத் தூண்டுகிறார் தம்பி குமார்
அவுக பங்காளிகளுக்குள்ள நடைமுறை வழக்கத்தை மீறி ஒரு பெண்ணைக் கட்டுகிறார் செல்வத்தின் மகன்… பையன் வீட்டுலயும் பொண்ணு வீட்டுலயும் அறிவுரைங்கிற பேர்ல தங்களுடைய வறட்டு கவுரவத்தை வீராப்பாக காட்டிவிட்டு வருகிறார் சாமிநாதன்… அதெல்லாம் கண்டுக்காம அவுக ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்கிறாக…
மனுசன் சில தலைமுறைகளுக்கு முன்னால ஏற்படுத்திய எதோ ஒரு பழக்கத்தை என்னா ஏதுனு எதுவும் தெரிஞ்சுக்காம அப்படியே இன்னமும் புடிச்சுக்கிட்டு தொங்கிறதும், அதுதான் நடைமுறைங்கிறதும்,  அதை மீறுபவர்கள் மீது கடுமையான எதிர்ப்பைக் காட்டுவதும் தொடர்வதை அதன் விளைவுகளையும் மிக எளிமையான எங்கள் மண்ணின் மொழி வழக்கில் கதையாக எழுதியிருக்கிறார் தம்பி…
செல்வத்தை செலுவம் என்று எழுதியதுமே எங்கள் மண்ணின் வழக்கு வந்து விடுகிறது...  தொடர்ந்து சொல்லி வரும் காட்சிகள், டீ டம்ளர்ல ஈ மொய்க்கிறது, எருக்கூட்டுவதற்கு கட்ட விளக்குமாறு, வேண்டாம்னு சொல்லியும் ஏன் காபி போட்ட, சரி கொண்டானு வாங்கிக் குடிக்கிற கோபத்துக்குள்ள பாசம் என இந்த வீராப்பு என்னும் சிறுகதையில் மண்ணின் மக்களின் அணுகுமுறை, கிராமத்தின் வாழ்வியல்  ஆகியனவற்றை தேவையான அளவு திருத்தமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்…
கடைசியாக சாமிநாதன் குடும்பத்தில் நடந்த ஒரு தற்கொலைச் சாவை நினைவு படுத்தும் செல்வம், சாமிநாதன்களின் வீராப்பு என்னும் வறட்டுக் கவுரவத்தின் மேல் சாணியடித்திருக்கிறார்…
நல்ல கதை, இன்னும் நிறைய எழுதுங்க… உங்கள் படைப்புகள் நூலாக வரவேண்டும்… வரும்… வாழ்த்துகள் எங்கள் மண்ணின் எழுத்தாளனே…
பி.கு. வீராப்பு – ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகாளவிய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதையாகும்.
கதையைப் படிக்க இங்கே சொடுக்கவும்...