Thursday, March 7, 2013

இப்படிக்கு, தோட்டக்காரன்...


ஓடி விளையாடும் குழந்தைகள்
கண்காணிக்கும் பணிப்பெண்கள்...

கால்நீட்டி அமர்ந்து
கதை பேசும் பெற்றோர்கள்...

சக்கரநாற்காலியில் சாய்ந்தமர்ந்து 
வானம் பார்த்திருக்கும் முதியவர்...

குப்பை பொறுக்குபவர்கள்
வேலை செய்து களைத்தவர்கள்...

உடல் இளைக்க நடப்பவர்கள்
உடல் இறுக்க ஓடுபவர்கள்...

காதுள் இசை கேட்டு 
கண் மூடி கரைந்திருப்பவர்கள்...

மண்ணுள் புதைந்த 
உணவைக் கிளறி உண்ணும் 
சின்னஞ்சிறு பறவைகள்...

மரக்கிளைகளில் கதைபேசி
மகிழ்ந்திருக்கும் பெரும்பறவைகள்...

சிதறிக் கிடந்த ரொட்டிகளை
உண்டு ஓய்ந்திருக்கும் பூனைகள்...

காலுறை மாட்டப்பட்ட
செல்ல நாய்கள்...

வண்டுகள்
எறும்புகள்
இன்னும் எத்தனையோ உயிர்கள்...

மஞ்சள்
சிவப்பு
ஊதா
வெள்ளையாய் 
வண்ண வண்ண பூக்களோடு
கனியும்,நிழலும் தரும் 
மரங்கள், செடிகள்...

என,

தோட்டத்தில் சில நேரம் 
தங்கிச் செல்வோரையும்
நின்று வாழ்வோரையும்

மேகத்திரை நீக்கி 
வானம் நீ, கீழ் பார்க்க ...

என் தாவரங்களோடு பேசிக்கொண்டே
தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்கிறேன்...

இப்படிக்கு,

தோட்டக்காரன்.


14 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தோட்டக்காரன் பார்வையில்... அருமை...

Balaji said...

நன்றி நண்பரே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமை...

அழகிய கவிதை படைப்பு...

Balaji said...

நன்றி திரு. சௌந்தர்...

வெங்கட் நாகராஜ் said...

படமும் படத்திற்கேற்ற சிறப்பான கவிதையும் அருமை....

arasan said...

உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம் ...
காண :http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_14.html

Balaji said...

நன்றி வெங்கட் அவர்களே...

Balaji said...

நன்றி அரசன் அவர்களே...

rajamelaiyur said...

அருமையான கவிதை வரிகள். . . தொடர்ந்து கலக்குங்கள். . .

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்....

Balaji said...

மிக்க நன்றி தனபாலன் அவர்களே...

Balaji said...

மிக்க நன்றி ராஜா அவர்களே...

Anonymous said...

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான கவிதை,

பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_14.html

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Balaji said...

மிக்க நன்றி ரூபன்...