Tuesday, September 10, 2013

குஞ்சுத்தாக்கோழி...

வீட்டில் கோழி வளர்ப்பவர்களுக்கு இது தெரிந்திருக்க கூடும்...

கோழி அடைக்கு கத்தியதும் ஒரு தட்டுக்கூடையில் மணல் பரப்பி, அதில் முட்டைகளை பரவலாக அடுக்கி அடை வைப்பார்கள்... திறந்தே வைத்திருக்கலாம்... கோழி எங்கும் போகாமல் அடைகாக்கும்... நாம் கிட்ட போனால், ஒரு வித ஒலி மட்டும் கொடுக்கும்... உணவு உண்ணாமல், எங்கும் செல்லாமல் அடையிலேயே அமர்ந்திருக்கும்.... மலம் கழிக்க கூட எப்போதாவதுதான் வெளியே சென்று வரும்...

Inline image 2

குஞ்சு பொரித்தவுடன் உடைந்த முட்டையின் தோலையே நொறுக்கி குஞ்சுகளுக்கு தின்னக்கொடுக்கும் குஞ்சுத்தாக்கோழி... பின்பு அடையை விட்டு வெளியே எடுத்து , (இப்போது இந்தக் குஞ்சுகளைத் தொட்டுப்பார்க்கவேண்டுமே, அவ்ளோ மென்மையாக இருக்கும்) பஞ்சாரத்தில் அடைத்து வைப்பார்கள்... 

குஞ்சுகளுக்கு இரையாக பச்சரிசியை அம்மியில் வைத்து மென் குருணையாக அரைத்து கொடுப்பது வழக்கம்... புழுங்கல் அரிசி கடினமாக இருப்பதால் பச்சரியையே முதலில் கொடுப்பார்கள்..

என்னதான் நாம் குருணையாக நுணுக்கி கொடுத்தாலும், குஞ்சுத்தாக் கோழி தன் அலகால் மேலும் அதை நுணுக்கி, தன் குஞ்சுகள் தின்ன ஏற்ற அளவில் கொடுக்கின்றது... தாய்க்கோழி நுணுக்கிப் போட்ட குருணையை குஞ்சுகள் உண்ணும்...

அதன் பின்பும் காக்கா, பருந்து மற்றும் வல்லூறு போன்ற பறவைகளிடமிருந்தும், காட்டுப்பூனைகளிடமிருந்தும் காப்பாற்ற அந்தத் தாய்கோழியின் எச்சரிக்கையான பார்வையும், பதற்றமும், ஆபத்தை உணர்ந்தவுடன் எச்சரிக்க அது செய்யும் ஒலியும் கோழி வளர்த்தவர்கள் நன்கறிவார்கள்... 

எதாவது நடக்கப் போகிறதென்றால், ஓடி வரும் குஞ்சுகளை தன் இறக்கைக்குள் அடைத்துக் காக்கும் தாயன்பு மிகச்சிறந்தது... 

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... தாயன்பு என்றும் சிறந்தது...

Balaji said...

நன்றி நண்பரே...

Yaathoramani.blogspot.com said...

இயற்கையாகவே பிராணிகளுக்கு
அமைந்துள்ள இதுபோன்ற உள்ளுணர்வுகள்
ஆச்சரியமேற்படுத்தித்தான் போகிறது
சிறப்பான பதிவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Balaji said...

நன்றி ஐயா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

எல்லாம் சரிங்க...

இந்த அடைக்குற சமயங்களில் இந்து கோழி பேனை ஒழிப்பது எப்படின்னு சொல்லுங்க தலைவரே...

ராஜி said...

தெரிந்த, ஆனால் மறந்த ஒரு விசய்த்தை நினைவு படுத்தியமைக்கு நன்றி

Balaji said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
எல்லாம் சரிங்க...

இந்த அடைக்குற சமயங்களில் இந்து கோழி பேனை ஒழிப்பது எப்படின்னு சொல்லுங்க தலைவரே...


தெரியலையே... :-(

குட்டன்ஜி said...

எல்லா உயிரினங்களிலும் தாயன்பு என்பது மகத்தானதே!

Balaji said...

உண்மை...