Sunday, October 7, 2012

ஆஜீத் காலிக் -- நீ வென்று விட்டாய்.... (Aajeedh Khalique)


ஆஜீத் காலிக் :
இசை உலகம் உன்னைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது.... 
எத்தனையோ ஆண்டு கால இசை அனுபவம் உள்ளவர்களெல்லாம் உன் பாட்டுக்கு எழுந்து நிற்கிறார்கள்.... 
உன் பாட்டிற்கு மதிப்பெண் இட வந்தவர்கள், உன் தேன் இசையில் மயங்கிக் கிடக்கிறார்கள்...
கருத்துச் சொல்ல சொற்களின்றி அவர்களின் குரல் தழுதழுக்கிறது... 
ஆனந்தக் கண்ணீரில் நனைகிறார்கள்

ஆஜீத் காலீக்: 

எத்தனையோ பாட்டுகளை நீ பாடி விட்டாய் இந்த மேடையில்... 
எந்தப் பாட்டிலும் உன் இசை எங்களை ஏமாற்றவில்லை... 
ஏங்க வைக்கிறாய்...
உருக வைக்கிறாய்...
சிலிர்க்க வைக்கிறாய்... 
மயங்கி கிடக்கிறோம்... 

எத்தனை முறை உன் பாட்டைக் கேட்டாலும் 
எங்களை கைகள் தானாகவே தட்டுகின்றன.... 
உன் இசை எங்கள் இதயம் தொட்டு இலகுவாக்குகிறது... பல பாடல்கள் ...
எத்தனை கடினமான பாடல்களாகட்டும்...
மிக எளிமையாக பாடி அசத்தி விடுகிறாய்...

மனப்பாடம் செய்து பாடலை பாடாமல்
மனதில் இறுத்தி உணர்வுகளைக் கொட்டி
எங்களை உன் இசையால் கட்டி வைக்கிறாய்...

உன் குரலில் உணர்ச்சிகளை வடிக்கிறாய்...
உன் கண்களில் பல காட்சிகளைக் காட்டுகிறாய்...
கட்டுப்பட்டுக் கிடக்கிறோம்... இன்னும்
காத்திருக்கிறோம்... தொடர்ந்து தா ஆஜீத்... 
எங்களை இதயங்களை இலகுவாக்கு...

மாசமா ஆறு மாசமா ஏங்கித் தவிச்சேன் 
என தொடங்கினாய் உன் வருகையை... 
அன்று முதல் உன் இசைக்காக 
ஏங்கிக் தவிக்கிறொம்
உலகில் பல கோடி ரசிகர்கள்...முதல் வரியிலேயே எங்கள்
அனைவரையும் கொள்ளை கொண்டாய்...

உன் பாட்டில் உருகிப்போனார்கள்
உலகம் முழுவதும் உன் ரசிகர்கள்
அந்த ஒரு பாட்டு போதும் 
உன் திறமையைப் பறை சாற்ற...நீ பாடிய அத்தனை பாடல்களையும் 
ஒவ்வொரு வரிக்கும் நீ காட்டிய அழகையும்
என்னால் எழுத்தில் வடிக்க இயலாது...
கண்ணால் கண்டு 
காது குளிரக் கேட்டு
சொக்கிப் போக வேண்டும்...

ஐயோ ஆஜீத்...அது போதும்... 
இதுவரை உன் குரல் கேட்காதவர்கள்...
ஆராமலே கேட்டால் 
உறுதியாகச் சொல்கிறேன் 
உன் ரசிகன் ஆவார்கள்...தேன் தடவி வரும் உன் குரல்
எங்கள் இதயத்தில் என்றும் இனிக்கிறது...

சூப்பர் சிங்கர் ஜீனியர் 3 
பட்டம் நீ வென்றாலும் வெல்லாவிட்டாலும்
என்னைப் போன்ற எத்தனையோ கோடி ரசிகர்களின் இதயத்தை 
எப்போதோ வென்று விட்டாய்...வாழ்க் ஆஜீத்
இறைவா அருள் செய்வாய்...


ஆஜீத்தின் பாடல்களை பார்த்துக் கேட்டு ரசிக்க, நனைய, உருக இங்கே சென்று பாருங்கள்.

நன்றி.

38 comments:

Semmalai Akash! said...

வாவ்! வாவ்! வாவ்! என்னச்சொல்ல, எப்படிச்சொல்ல.. ஸ்பெஷலி " ரோஜா ரோஜா ..ரோஜா ரோஜா" பாடலைக் கேட்டதும் அசந்துபோனேன், அப்படி ஒரு குரல் இந்த குழந்தைக்கு, அருமையா பாடி இருப்பார், பழையப் பாடல்களைப் பாடும்போது நிறுத்தி குரலையெழுப்பி பாடுவது அவருடைய ஸ்பெஷல் என்றே சொல்லலாம். ரொமாண்டிக் பாடலை பாடும்போது மிகவும் ரசித்து நேசித்து பாடுவார். எல்லோரும் அசந்துபோவார்கள். இவருக்கு நல்லதொரு எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துகள் அஜிக்கு.

அருமையா எழுதி உங்களுடைய உணர்வுகளை எங்களுடம் அற்புதமாகப் பகிர்ந்துக்கொண்டதற்க்கு மிக்க நன்றி அண்ணா.

Balaji said...

மிக்க நன்றி தம்பி...

Jaffer ALi said...

அருமையான பதிவு பாஸ்..ஆஜிதுக்கு வாழ்த்துகள்

Balaji said...

நன்றி ஜெஹபரு...

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... நன்றி...

இங்கு மின்சாரம் ஆறு அல்லது எழு மணி நேரம் மட்டுமே...

Balaji said...

Thanks

Bhuvana said...

Very nice .. It is a treat for a big aajeeth fan like me

Balaji said...

ரொம்ப நன்றிங்க...

Mohananthi said...

nalla varnanai.antha kutty isaikku(aajeedh)neengan thoguthirukkum intha kutty kavithai kalakkal.irunthum oru chinna kurai po nee po padali vittu vittirgale....

Balaji said...

ரொம்ப நன்றிங்க Mohananthi.

போ நீ போ லிங்க்ல குடுத்திருக்கேன்....

இன்னும் நிறைய பாடல்கள் சொல்லாம விட்டுட்டேன்...

தீயில் விழுந்த தேனா, நிலாப்பாடல்கள், ஹஸ்லி ஃபிஸ்லி... சொல்லிக்கிட்டே இருக்கலாம்...

ரொம்ப நன்றிங்க...

Anonymous said...

சூப்பர் சிங்கரில் எனக்குப் பிடித்த பையன் ஆஜித் தான் .. சுட்டிப் பையன் என்றாலும் திறமை மிக்கவன், அவனது உடை மிடுக்கு தனி யழகு .. லிட்டில் சூப்பர் ஸ்டார் எனக் கூறலாம் .. அனைத்து குழந்தைகளும் நன்றாகவே பாடுகின்றன .. குறிப்பாக யாழினி ..

இருவரும் மற்றவர்களை விட வயதில் சிறியவர்கள் என்ற போதும் அருமையாக போட்டிப் போடுகின்றார்கள்.

அவர்கள் மேன்மேலும் வெற்றியடை வாழ்த்துக்கள் .

Sheila Elankovan said...

Well said..he it's a gifted child with such a amazing talent. And you have wrote what it's in the heart off his fans..bravo

Kanagaraj Muthu said...

ஆஜிதுக்கு வாழ்த்துகள்...

மேன்மேலும் வெற்றியடை வாழ்த்துக்கள் ...

Balaji said...

எல்லாரும் திறமையான குழந்தைகள்தான்...

ஆனாலும் ஆஜித்திடம் கூடுதலா என்னமோ இருக்கு.


மிக்க நன்றிங்க...

Balaji said...

Thanks

Balaji said...


மிக்க நன்றிங்க...

Suganthini said...

ஆஜீத் சூப்பர் சிங்கரில் வின்னர் ஆகுரரோ இல்லையோ அவர் நம் மனதளவில் மிக பெரிய லெஜென்ட்..... நன்றி ஆஜீதின் புகழை இன்னும் மேல் தூக்கி விட்டதுக்காக... கலக்குங்கள் ராகேட் ராஜா...

வடுவூர் குமார் said...

நானும் இவனின் ரசிகன்.

Balaji said...

Suganthini

ரொம்ப நன்றிங்க...

உண்மைதான்...

Balaji said...

வடுவூர் குமார்

ரொம்ப நன்றிங்க...

பல பேர் இவனுக்கு ரசிகராகிப் போனார்கள். :-)

babu said...

ரொம்ப நன்றிங்க.

babu said...

ரொம்ப நன்றிங்க.

Mohamed Hashim Abdul Husein said...

"Eendra poluthilum perithuvappaal than mahan shandron enakanda thaai" Unnai petraval endro ivinbathai adaidu vittaal.Menmelum vetri pera enathu valthukkal. (srilanka)

niyaz ahamed said...

அனைத்து பாடல்களிலும் எங்கள் நெஞ்சை அள்ளுகிறாயடா ஆஜித்.. அனைத்து பாடல்களையும் எங்களுக்காக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பாலாஜி.

Balaji said...

அனைவருக்கும் நன்றி.

sbaliny said...

நன்றி அண்ணா. நான் இவனின் மிக மிக மிக மிக......பெரிய.......ரசிகை.வாழ்த்துக்கள் ஆஜித் குட்டி.நீ வெல்லுவாய்

sbaliny said...

நன்றி அண்ணா. நான் இவனின் மிக மிக மிக மிக......பெரிய.......ரசிகை.வாழ்த்துக்கள் ஆஜித் குட்டி.நீ வெல்லுவாய்

சிட்டுக்குருவி said...

நானும் ஆஜித் ரசிகந்தான் பாஸ்
ஆனா போட்டியில நடுவர்கள் ஆஜித் பற்றி பாராட்டும்போது மிகைத்து விடுகிறார்கள் அவர்கள் ஏனைய போட்டியாளர்களையும் (சிறுவர்கள்) அவர்கள் மன நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்......

Shaffi Syed said...

very well written about aajeedh....i am big time follower of his performance.....

gautham narayanan said...

அருமையான பதிவு பாஸ்..ஆஜிதுக்கு வாழ்த்துகள்...

Balaji said...

sbaliny

மிக்க நன்றிங்க...

Balaji said...

சிட்டுக்குருவி...

மிக்க நன்றிங்க....

Balaji said...

Shaffi Syed

மிக்க நன்றிங்க...

Balaji said...

gautham narayanan

மிக்க நன்றிங்க...

Neyam Acupuncture said...

aajith mugavari kidaikkuma, pls emamil to jahabar_kul@rediffmail.com

Neyam Acupuncture said...

aajith mugavari kidaikkuma, pls emamil to jahabar_kul@rediffmail.com

Balaji said...

எனக்குத் தெரியாதுங்க.... Neyam Acupuncture

Sweety M said...

Aajeeth unnoda ella songaum nan rasipen ,, ne select aga paduna maasama songlaye mayakitta athula irunthu nan un fan,,, apram roja roja song, aaromale ,, en anbe en anbe from mounam pesiyathey,, apram anbe anbe kollathe songah hariharan siroda ne padunathu,,, apram 3 generation song padunathu ,, naan padum mouna ragam kekavillaya semaiya paduna kutty,, thaniyaga thavikindren athuvum than last final la kanneerae santhosa kanneera ,,, super aajeeth i luv u da