Wednesday, September 26, 2012

உலகிலேயே உயரமான, நீளமான, பெரிய..... -- துபாய் -- துபாய் மெட்ரோ (Dubai Metro)


அனைவருக்கும் வணக்கம்,

இதற்கு முந்தைய பதிவில் துபாய் ஃபவுண்டெய்ன் பற்றிப் பார்த்தோம்... 

வாருங்கள், துபாய் மெட்ரோ பற்றிப் பார்க்கலாம்.... 
எனக்குத் தெரிந்த தகவல்களைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

துபாய் மெட்ரோ -- Dubai Metro.




அமீரகத்தில் முதன் முதலாக தொடங்கப்பட்ட ஒரு ரயில் போக்குவரத்து இந்த துபாய் மெட்ரோ. 1997 ஆம் ஆண்டு முதல் 2000 வரை மேற்கொண்ட  ஆய்வுகளின் முடிவில், எதிர்காலத்தில் துபாய்க்கு சாலை போக்குவரத்து மட்டும் போதுமானது அல்ல, துபாயின் போக்குவரத்தை எளிதாக்க துபாய் மெட்ரோ ரயில் திட்டத்தை உருவாக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.


(ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த துபாய் மெட்ரோ மாதிரி படம். நான் எடுத்த படம்)


09.09.09 - Red Line

அதன் பின்னர் படிப்படியாக,  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் 09 ஆம் தேதி இரவு சரியாக 09.09.09 மணிக்கு, துபாய் மெட்ரோ தொடங்கி வைக்கப்பட்டது.  நான்கு வழித்தடங்களாக, அதாவது Red Line, Green Line, Purple Line and Blue line, மெட்ரோ ரயில் போக்குவரத்து செயல்பட வேண்டும் என திட்டம் வகுக்கப்பட்டு, முதலில் ரெட் லைன் மட்டும் தொடங்கப்பட்டது.  

ராஷீதியா எனும்  இடத்தில் இருந்து ஜெபல் அலி எனும் இடம் வரை பயணிக்கலாம்.  
பயண நேரம் 70 நிமிடங்கள் ஆகும்.
பயண தூரம் தோராயமாக 52.1 கி.மீ.
மொத்தமாக 29 நிலையங்கள் (ஸ்டேஷன்கள்) உள்ளன. இவற்றில் தரைக்கு மேல் 25 நிலையங்களும், தரைக்கடியில் 4 நிலையங்களும் உள்ளன.
துபாய் விமான நிலையத்தின் இரண்டு நிலையங்களை இந்த துபாய் மெட்ரோ - ரெட் லைன் இணைக்கிறது.
இரண்டு பெரிய கார் நிறுத்தங்கள் உள்ளன. கார் நிறுத்துவதற்கு கட்டணமில்லை.



09.09.2011 - Green Line

இரண்டாவது வழித்தடமான க்ரீன் லைன் 09 ஆம் தேதி செப்டம்பர் மாதம் 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

அல் குஸைஸ் என்னும் இடத்திலிருந்து கீரிக் ஸ்டேசன் என்னும் இடம் வரை பயணிக்கலாம்.
பயண நேரம் 36 நிமிடங்கள்
பயண தூரம் தோராயமாக 23 கி.மீ.
கீரீன் லைனில் மொத்தமாக 18 நிலையங்கள் உள்ளன. இவற்றில் 12 நிலையங்களை தரைக்கு மேலும், 6 நிலையங்களை தரைக்கு கீழும் அமைத்துள்ளார்கள்.  இரண்டு மெட்ரோ (ரெட் லைன் மற்றும் க்ரீன் லைன்) தனித்தனி வழித்தடங்கள் இருந்தாலும்,  Union நிலையம் மற்றும் Khalid bin al Waleed  நிலையங்களை இணைக்கின்றன. ஆகவே இந்த க்ரீன் லைனில்  மொத்தம் 6 அண்டர்கிரவுண்ட் நிலையங்களாக கணக்கில் கொள்ளலாம்.
ஒரு பெரிய கார் நிறுத்தம் உள்ளது. கார் நிறுத்துவதற்கு கட்டணமில்லை.


சரி, விவரம் எல்லாம் சொல்லியாச்சு, 
பல நாடுகளில் மெட்ரோ ரயில் போக்குவரத்து இருக்கின்றதே!!!
துபாய் மெட்ரோவிற்கு மட்டும் என்ன சிறப்பு!?!?
திவின் தலைப்பைத் தொடுகிற மாதிரி ஒரு விவரமும் சொல்லலையேனு பார்க்கிறீங்களா!?



(மெட்ரோ பாதையை காட்டும் படம். என் நண்பர் திரு. நௌஃபல் எடுத்த படம்)


இதோ வாரேன்....

துபாய் மெட்ரோ ரயிலின் சிறப்பு என்னவென்றால், இது உலகிலேயே அதிக தூரம் பயணிக்கூடிய ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலாகும்.  முழுக்க முழுக்க தானியங்கியான துபாய் மெட்ரோ ரயில் மொத்தமாக 75 கி.மீ தூரம் பயணிக்கிறது. 

Union Station:

துபாய் மெட்ரோவில் உள்ள யூனியன் நிலையம்தான் உலகத்திலேயே பெரிய தரைக்கு கீழ் கட்டப்பட்ட நிலையம் ஆகும். இதன் பரப்பளவு 25000 சதுர மீட்டர்கள்.




(தரைக்கு கீழே மெட்ரோ பாதையை என் நண்பர் திரு. நௌஃபல் எடுத்த படம்.)


மேலும் சில தகவல்கள்:

21 ஆம் நூற்றாண்டின் உலகத்தரமான மெட்ரோ ரயில் போக்குவரத்து.

துபாய் மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, பெரிய இயந்திரங்கள் மூலம், தரையிலிருந்து தோராயமாக 29 மீட்டர் ஆழத்தில்(அதிகபட்சமாக), 9.3 மீட்டர் விட்டமுள்ள சுரங்கப்பாதை(Tunnel) அமைத்து, அதில் வழித்தடங்களை அமைத்திருக்கிறார்கள். 

மணிக்கு 90 கி.மீ வேகத்தில் செல்லக் கூடியது.

ரயிலுக்குள் வைஃபை வசதி உண்டு.

ரயில் நிலையங்களில் சிறிய கடைகள், பண பரிவர்த்தனை செய்ய எக்சேஞ்சுகள், ஏடிஎம் கள் உள்ளன.

ரயில் நிலையத்தில் இருந்து நகரத்திற்குள் செல்ல சிறப்பு பேருந்துகள் உண்டு.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அனைத்து விதமான மக்களுக்கும் போக்குவரத்திற்கு எளிதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது.


அனைவருக்கும் நன்றி.


10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தகவல்கள் பிரமிக்க வைக்கிறது (படங்களும்)....

பகிர்வுக்கு நன்றி...

09.09.09 அங்கேயும் இந்த நம்பிக்கை உண்டா...?

Balaji said...

நன்றி நண்பரே...

09.09.09 அங்கேயும் இந்த நம்பிக்கை உண்டா...?

தெரியல ஒரு ஃபேன்சியா வச்சிருப்பாங்கனு நினைக்கிறேன்.

Jaffer ALi said...

அருமையான பதிவு பாஸ்..படங்களும் மிக அருமை..திரு நவ்ஃபலுக்கு பாராட்டுக்கள்..

Balaji said...

மிக்க நன்றி ஜெஹபர்....

நௌஃபலுக்கு பாராட்டுக்களைச் சொல்லிடுறேன்...

semmalai akash said...

மிக மிக அருமையான பதிவு அண்ணே, சும்மா அப்படியே! தூள் கிளப்புறீங்க! ஆமா
தொடர்ந்து எழுதுங்க.

Balaji said...

ஹா ஹா ஹா....

நன்றி தம்பி....


தொடருவோம்...

மதுரை வலைப்பதிவர்கள் said...

துபாய் கட்டுரை....

தகவலுக்கு நன்றி

Balaji said...

நன்றி....

Barari said...

இங்கு துபையில் உள்ளவர்களே அறியாத பல தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி தம்பி.வாழ்த்துக்கள்.

Balaji said...

நன்றி அண்ணே...