துபாயில் கந்தர் சஷ்டி திருவிழா (08.11.2013 - 09.11.2013) வெகு சிறப்பாய் நடைபெற்றது... மனமகிழ்ச்சியாக ஊரில் ஒரு திருவிழா கொண்டாடியது போன்ற உணர்வு...
வெற்றி வேல்... வீர வேல்...
கந்தர்சஷ்டி விழா என்றவுடன் எதோ பூஜை பண்ணுவாங்க, போய் சாமி கும்பிட்டுட்டு வந்துடலாம் என்ற எண்ணத்தோடுதான் முதலில் சென்றேன்...
பின்பு தஞ்சாவூர் பால்ராஜ் அவர்களின் காவடியாட்டம்... இவரது வழுக்கை மண்டையில் காவடி என்னமாய் சுழல்கிறது... வியப்படையச் செய்துவிட்டார் காவடியாட்டத்தின் மூலம்...
முருகனைச் சிறுவன் என்றெண்ணி இறுமாப்புடன் இருக்கும் அசுரன்...
எமிரேட்ஸ் இங்லீஸ் ஸ்பீக்கிங் ஸ்கூல் எனும் பள்ளியின் அரங்கில் இந்த விழா எற்பாடு செய்திருந்தார்கள்... உள்ளே நுழைந்ததும் பெரும் ஆச்சரியமாக இருந்தது... சங்கர் படம் போல மிகப்பிரமாண்டமாக மேடை அமைத்திருந்தார்கள்... கோயில் கருவறை போன்று அழகாய் அமைத்து அங்கே அழகன் முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி தந்தார்...
மேடையின் ஒரு புறம், முருகன் பாடல்களை ஒரு குழுவினர் மிக அழகாய் பாடிக்கொண்டிருந்தனர்...
நாதஸ்வரம் மேள தாளத்துடன் அந்த பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் போது அப்படியே ஊரில் திருவிழா காண்பது போல இருந்தது...
வந்திருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி...
அடுத்ததாக கரகாட்டம் மற்றும் காவடியாட்டம்...
தஞ்சாவூரில் இருந்து கலைக்குழுவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்...
இங்கும் இந்தக் கலைக்குழுவினரைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சி... முதலில் கரகாட்டம் சிறப்பாக தொடங்கியது... மிக அழகாக ஆடினர் இந்தப் பெண்கள்...
பின்பு தஞ்சாவூர் பால்ராஜ் அவர்களின் காவடியாட்டம்... இவரது வழுக்கை மண்டையில் காவடி என்னமாய் சுழல்கிறது... வியப்படையச் செய்துவிட்டார் காவடியாட்டத்தின் மூலம்...
இவைகளை எல்லாம் கண்ட குழந்தைகளின் முகத்தில் ஒரு வித மகிழ்ச்சியைக் காண முடிந்தது... சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் விளக்கிக் கொண்டிருந்தார்கள்... அதுதான் கரகம் அதுதான் காவடி என்று...
தமிழர் கலைகளை இங்குவரை கொண்டு வந்து சேர்த்து, குழந்தைகளிடம் அறியச்செய்ததற்கு விழாக்குழுவினர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்...
சூரசம்ஹாரம்...
இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் கடற்கரையில் நடக்கின்றது என அறிந்திருக்கிறேன்... அவ்ளோதான்...
முழுமையான விளக்கம் என்னவென்று தெரியாது...
திருச்செந்தூர் முருகனுக்கு பூஜை செய்யும் ஐயரையே அழைத்து வந்திருக்கிறார்கள்... ஒவ்வொரு நிகழ்வையும் விளக்கமாகச் சொன்னார்... நாந்தான் மறந்துட்டேன் நிறைய....
சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் வருகிறார்...
முருகனை அவமானப்படுத்தும் விதமாக, முருகனின் இடதுபுறமாக இரண்டு முறை சுற்றி வந்தான் அசுரன்...
முருகனும் அவன் பிழைத்துப் போக, மூன்று முறை (சரியாக நினைவில்லை) வாய்ப்புத் தந்தார்... நிறைய தமிழ்ப்பாடல்கள் பாடினார்கள் முருகனுக்கும் அசுரனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களை விளக்கும் விதமாக...
கடைசியா வெற்றி வேல் வீர வேல் என மக்களின் பெருங்குரலுடன், முருகன் தன்னுடைய வேலினால் அசுரனின் தலையைக் கொய்தார்...
வீழ்ந்தான்...
அடுத்ததாக சிங்கமுகாசுரன்...
பழைய தலையைக் கழட்டி விட்டு சிங்க தலையை மாட்டி விட்டார்கள்... அவனுடைய தேரும் முருகனுடைய தேரை சுற்றி வந்தது... அந்த வழியே கரகாட்டக்கலைஞர்களும் ஆட்டம் பாட்டமாக சுற்றி வந்தார்கள்...
அடுத்ததாக யானைமுகாசுரன்...
கரகாட்டம்...
அடுத்து மயூராசுரன்...
கடைசியாக சேவலாக மாறி முருகனிடம் வந்தான்...
சம்ஹாரம் என்பது கொலை செய்வது மட்டுமல்ல, அவர்களை நம்மோடு சேர்த்து கொள்வது என்று சொன்னார்கள்...
முருகனிடம் ஐக்கியமாகிவிட்டான் அசுரன்...
திருக்கல்யாணம்...
காலையிலேயே குழந்தைகள் முருகன் பாடல்களை பாடத் தொடங்கிவிட்டனர்...
பின்பு சிறுமிகளின் காவடியாட்டம்...
சற்று நேரம் கிடைத்த ஓய்வில்...
பரபரப்பாக படம்பிடித்துக் கொண்டிருந்தவர்கள்...
முருகன் வள்ளி தெய்வானை வேடமிட்டிருந்த குழந்தைகள்...
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடலுக்கு நடனம்...
இதற்கடுத்து அறுபத்தி மூனோ நாலோ தெரியல, அத்தனை வகை சீர் வரிசைகளை பெண்கள் தாம்பாளத் தட்டில் கொண்டு வர, பின்பு முருகனின் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது...
3 comments:
படங்கள் ஒவ்வொன்றும் அருமை... அற்புதம்... நாங்களும் கலந்து கொண்ட உணர்வு... நன்றி... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி நண்பரே
அருமையான படங்கள். விழா பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
Post a Comment