வணக்கம் நண்பர்களே,
வார விடுமுறைப் பயணமாக ஒமான் சென்று வந்தேன்... எப்பொழுது ஒமான் சென்றாலும், என் நண்பன் வீட்டில், உண்டு உறங்கி பொழுதைக் கழிப்பதே என் வாடிக்கை...
மலையில் விவசாயம்...
இம்முறை நண்பர்கள் அல் ஜெபல் அல் அக்தர் எனும் சுற்றுலாத்தளத்திற்கு அழைத்துச் சென்றார்கள்... மஸ்கட்டிலிருந்து நிஸ்வா(NIZWA) எனும் ஊருக்கு செல்லும் வழியில் சுமார் 180 கி.மீ தொலைவில் இந்த இடம் இருக்கின்றது... மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் ஒமானிகளின் பழைய வீடுகள் என இவைகள்தான் இங்கு பார்க்க வேண்டிய இடங்கள்...
மலையேறும் முன்பு ஒமான் காவல்துறையினர், சுற்றுலாப்பயணிகளின் அடையாள அட்டையை சரிபார்த்து, ஒரு காரில் எத்தனை பயணிகள் இருக்கின்றனர், கார் பற்றிய விவரங்கள் என அனைத்தையும் குறித்துக் கொண்டு அனுப்பி வைக்கின்றனர்.
இதுதான் முதல் முறையாக வருகின்றீர்களா எனக்கேட்டு விட்டு, மிகவும் செங்குத்தாக ஏறும் பாதை என்பதால் எப்படிக் கார் ஓட்ட வேண்டும் என அறிவுரையையும் ஓட்டுனர்களுக்கு சொல்லி அனுப்புகின்றனர்.
ஃபோர் வீல் ட்ரைவ் வசதி உள்ள கார்களுக்கு மட்டுமே மேலே ஏற அனுமதி தருகின்றனர்... மலை மீது அருமையான சாலை வசதி செய்து தந்திருக்கிறார்கள்... செல்லும் வழியில் சில ஊர்கள் இருக்கின்றன...
வழியெங்கும் பள்ளத்தாக்குகளும், ஆங்காங்கே சில இடங்களில் குறைவான எண்ணிக்கையில் சில வீடுகளும் இருக்கின்றன...
இப்படியாக பயணம் செய்து கடைசியாக பார்க்கவேண்டிய இடத்திற்கு வந்தாகி விட்டது...பள்ளத்தாக்கில் இறங்கி மறுபக்கம் ஏறினால் இந்த பழைய வீடுகளைப் பார்க்கலாம்...
கடும் வெப்பத்தில் பயணம் செய்து இந்த பள்ளத்தாக்கில் இறங்கியதுமே, மென்மையான குளிர் காற்று... செல்லும் வழியில் ஒரு சின்ன நீரோடை... மிகவும் குளிர்ச்சியான நீர்... பசுமையான பள்ளத்தாக்கு...
அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு பின்பு மலை மீது ஏறினோம்...
பழைய வீடுகளைப்பார்க்க... செல்லும் வழியில் இது போன்ற சிறு குகைகளும் கண்ணில் பட்டன...
அங்கு நான் பார்த்ததை நீங்களும் பாருங்கள்...
4 comments:
படங்களே தெரியலே சார்
மன்னிக்கணும்...சரி செய்துட்டேன் ஐயா... இப்ப பாருங்க... நன்றி...
பணிச்சுமைக்கு இடையே பயணங்கள் நிச்சயம் புத்துணர்வு தருகின்றன.....
படங்கள் அனைத்துமே அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி ஐயா...
Post a Comment