Sunday, August 26, 2012

மகளே என் தாயாய் தகப்பனாய்!

மகளே என் தாயாய் தகப்பனாய்!


என்னென்னமோ வினவுகிறாய்
எதையும் ஆராய்கிறாய்

கடைகளுக்கு சென்றால் மொத்தமாக
விலை பேச சொல்கிறாய்

உடம்புக்கு ஒவ்வாததை
உடனே வாங்கச் சொல்லி
ஒற்றைக் காலில் நிற்கிறாய்

அந்நேரங்களில்
ஐஸ் கிரீம் கண்டுபிடித்தவன்
என் கைகளில் சிக்குவதில்லை

 மடிகணினி மிதியடியானது

அலுவலக குறிப்பேடு - உன்
கிறுக்கல் ஏடானது

துவைத்து வைத்த சட்டை
சிலேடு அழிக்கும் துணியானது

சினம் கொள்ளவில்லை
ரசித்து சிரிக்கிறேன்

ஒவ்வொரு நாளும்
புதியதாய் ஏதோ செய்கிறாய்
பிரமிப்பாய் இருக்கிறது

குறும்புகள் பல செய்தே
குறிப்பால் உணர்த்துகிறாய்
என் பெற்றோரின் பொறுமையை


மகளே என் தாயாய். தகப்பனாய்

4 comments:

Shankar M said...

nice. Muditha vitham romba nalla irukku

Balaji said...

நன்றி சங்கர்.

Prijil.P.S said...

Good one Sir :) just loved readin it.. :)

Balaji said...

நன்றி ப்ரிஜில்...