அனைவருக்கும் வணக்கம்...
இதுவரை துபாய் பார்க்காதவங்களுக்காகவே இந்தப் பதிவு... ஏற்கனவே துபாய் பார்த்தவர்களும் சும்மா படிச்சுப் பாருங்க...
துபாய்:
ஏழு அமீரகங்கள் இணைந்துதான் ஐக்கிய அரபு அமீரகங்கள் (United Arab Emirates) என்கிற நாடு. இதில் துபாய் என்பது இரண்டாவது பெரிய அமீரகம்.
ஏழு அமீரங்கள் என்பன, அபுதாபி (தலைநகரம், பெரிய அமீரகம்), துபாய், சார்ஜா, ரஸ் அல் கைமா, உம் அல் குவைன், அஜ்மான் மற்றும் ஃபுஜைரா.
உள்ளூர்க்காரர்கள் துபாயை துபை என்று உச்சரிக்கிறார்கள். வெள்ளைக்காரர்கள் டுபாய் என்று உச்சரிக்கிறார்கள். பல விதமான கலாச்சாரங்கள், இன மக்கள் இணைந்து வாழும் இடம் துபாய்.
சரி, இப்ப நாம பார்க்கப் போறது சில சிறப்பான தகவல்கள்... "உலகிலேயே" என்ற சொல் ஒன்று இருக்கிறது. அது அதிகமாக பயன்படுத்தப்பட்டது துபாயில்தான் என்று சொல்லலாம். :-) உலகிலேயே நீளமான, உயரமான, பெரிய என்று பல சிறப்பானவைகள் துபாயில் இருக்கின்றன. இதுவரை சுமார் 102 கின்னஸ் சாதனைகளை UAE படைத்திருக்கிறது என்றொரு தகவல் இருக்கின்றது.
அவற்றில் சில சிறப்பானவைகளை இங்கு பார்ப்போம்...
தொடங்குவதற்கு முன்பு துபாய்ல பஸ் ஸ்டாண்ட் இருக்கு எனபதை தெரிவித்துக் கொள்கிறேன். என்னமோ உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்டு மாதிரி சொல்றேனு வடிவேலு மாதிரி கேட்கக்கூடாது. ஒரு தகவலுக்காகச் சொல்றேன். துபாயின் அல் குபைபா பஸ்ஸ்டாண்ட் என்பது பர் துபாய் எனும் இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து துபாயிலுள்ள இடங்களுக்கும் மற்ற அமீரகங்களுக்கும் பேருந்துகள் கிடைக்கும். அங்க ஒரு காஃபிட்டேரியா இருக்கு, அங்க மாலை வேளைகளில் சூடான பஜ்ஜி, சமோசாலா போட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். அப்படியே நம்மூரு பஸ்ஸ்டாண்ட் மாதிரி ஒரு உணர்வு வரும்.
துபாய் பஸ்:
முழுவதும் ஏர் கண்டிசன் செய்யப்பட்ட பேருந்து
பேருந்தினுள் பெண்கள் குழந்தைகளுக்கு தனியாக ஒரு பகுதி உண்டு.
மாற்றுத்திறனாளிகளூக்கான சிறப்பு வசதிகள்.
என எல்லா வசதிகளும் உண்டு. டிக்கெட் எடுப்பதற்கு 09.09.2009 முதல் ஸ்மார்ட்கார்ட்தான் பயன்படுத்துகிறோம். பின்பு இந்த முறை பற்றி விரிவாக எழுதுகிறேன்.
சரி, இனி ”உலகிலேயே” என்ற சொல் பற்றி பேசுவோம்.
க்ரேன்(Crane):
துபாய் மிக வேகமா வளர்ந்து வரும் அமீரகம். உலகிலுள்ள கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் பொறியாளர்கள் தங்களுக்கு என்னென்ன கற்பனையில் தோன்றியதோ, அத்தனை வடிவங்களையும் இங்கு கட்டிடங்களாக கட்டி வைத்திருக்கிறார்கள். அழகழகான கட்டிடங்கள், எங்கு பார்த்தாலும், கண்ணாடிச் சுவறால் சூழப்பட்ட அழகான கட்டிடங்கள். இந்தக் கட்டிடங்கள் கட்டுவதிலேயே ஒரு சாதனை இருக்கின்றது. உயரமான கட்டிடங்கள் கட்டுவதற்கு க்ரேன் என்ற கருவியைப் பயன்படுத்துகிறார்கள். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த செய்திப் படி, உலகிலுள்ள 125000 க்ரேன்களில், 30000 க்ரேன்கள் அதாவது 24 % க்ரேன்கள் துபாயில் பயன்படுத்தப்பட்டு வந்ததாம். இதுவே சொல்லும், எந்தளவுக்கு கட்டுமானப் பணிகள் இங்கு நடந்து கொண்டிருக்கின்றன என்று.
(படம் இணையத்திலிருந்து)
இத்தனை க்ரேன்கள் வைத்து கட்டிடம் கட்டுகிறார்கள் என்றால் அதிலும் ஒரு சாதனை வேண்டுமல்லவா.... வாருங்கள் பார்க்கலாம்...
இன்றைக்கு உலகிலேயே உயரமான கட்டிடம் புர்ஜ் கலீஃபா ; மொத்தம் 828 மீட்டர் (2,716.5 அடி) உயரம், 160 மாடிகள் கொண்ட கட்டிடம்.
உலகிலேயே அதிமான மாடிகள் உள்ள கட்டிடம்
உலகிலேயே அதிக தூரம் பயணம் செய்யும் லிஃப்ட் உள்ள கட்டிடம்
இப்படி பல சிறப்புகள் உள்ள கட்டிடம் புர்ஜ் கலீஃபா.
புர்ஜ் கலீஃபா கட்டப்பட்ட போது எடுத்த படம்(இணையத்திலிருந்து)
இப்ப புர்ஜ் கலிஃபா இப்படி அழகாக காட்சியளிக்கிறது. என் நண்பர் நௌஃபல் எடுத்த படம் இது.
இந்த புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் 124 மாடிக்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். முன் கூட்டியே ஆன்லைனில் பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
அடுத்து
துபாய் மால்:
......................................
(தொடர்ந்து வாருங்கள், நன்றி)
6 comments:
துபாய் - பல தகவல்கள் வியப்பாக இருக்கிறது... (125000 க்ரேன்களில், 30000 க்ரேன்கள்...!!!)
அதுவும் புர்ஜ் கலீஃபா... யம்மாடி...
மிக்க நன்றி... தொடர்கிறேன்...
ரொம்ப நன்றி. உங்க பதில் ஊக்கமளிக்கிறது.
இந்தப் பதிவைப் படிக்கிறவங்களுக்கு துபாய்க்கு ஒரு ரிட்டர்ன் டிக்கெட் தரப்படாதா..? :-)
ஹா ஹா ஹா.... சேட்டைக்காரரே....
”நீளமான” -னு இருந்தவுடன் ஆர்வத்துடன் வந்தேன். ”தடிமனான” - துபாயில இல்லையா பாஸ்?
பல தகவல்கள் எங்களைப் போன்றவர்களுக்கு புதுமை...
தொடரட்டும் துபாய் பகிர்வுகள்....
Post a Comment